மஹிந்த அமரவீரவுக்கு இந்தியா அழைப்பாணை!

0
137

இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர், மஹிந்த அமரவீரவை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைக்கவுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் ஸ்ரீ விகாஸ் ஸ்வரப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணவேண்டும் என்று இணங்கினர்.

இதன் அடிப்படையிலேயே மஹிந்த அமரவீரவுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ விகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டதன் பலனாகவும் இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வரும் இலங்கையின் அமைச்சருடன் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண முயற்சிக்கப்படும் என்றும் ஸ்ரீவிகாஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் எப்போது அளவில் இந்த விஜயம் இடம்பெறும் என்பதை அவர் இதுவரை குறிப்பிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here