முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும்வரையில் அவர்களுடன் எந்தவொரு நல்லிணக்க பேச்சுவார்த்தைகளும் இடம்பெற மாட்டாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு கடந்த காலங்களில் எடுத்த எந்தவொரு தீர்மானத்துக்கும் கட்டுப்படாது, கட்சி உறுப்பினர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.