மஹிந்த கொள்ளையிடவில்லை! : ராஜித மறுப்பு

0
116

தான் மஹிந்த கொள்ளையிட்டதாக கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மஹிந்த ராஜபக்ஷ கழுத்தை அறுத்துக் கொள்வதாக அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த வேளை, ராஜபக்ஷக்களே கொள்ளையிட்டதாக தான் குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித்த கூறினார்.

மேலும், மஹிந்த கொள்ளையிட்டதாக அல்ல அவரைச் சுற்றியிருந்தவர்களே கொள்ளையிட்டதாக தான் தெரிவித்ததாகவும், அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் பதிலளிக்க சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பலமுறை வாய்ப்பளிப்பது ஏன் என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த ராஜித்த பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு பதிலளிக்க பொன்சேகாவுக்கு பிரதமர் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here