மஹியங்கனை மாபாகடவெவ பகுதியில் உள்ள கால்வாயில் சிற்றூர்ந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இன்று காலை கெகிராவை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வேளை குறித்த சிற்றூர்ந்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பெண்ணொருவர் உட்பட 3 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போயுள்ளவர் மஹியங்கனை பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணிப்புரிபவர் என தெரியவந்துள்ளது.
(க.கிஷாந்தன்)