மாகாணசபை தேர்தலில் 75 வீத உறுப்பினர்கள் தொகுதி முறையில் தெரிவாகவேண்டும்.
மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்படுமாயின் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக கொண்டு 75 சத வீத உறுப்பினர்களும் மாவட்ட சனத்தொகை அடிப்படையில் 25 சதவீத உறுப்பினர்களும் தெரிவாகும் விதத்தில் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும். என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை ஐம்பதற்குää ஐம்பது என்ற கலப்பு முறையில் நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் நடைமுறைக்கு பொருத்தமற்றதாகும். நாட்டின் இன ரீதியிலான சனத்தொகை பரம்பலை கவனத்தில் கொள்ளாமல் எவ்விதமான அடிப்படை காரணங்களும் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எப்படியாவது கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசாங்கத்தால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். இதற்காக பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பொருத்தமற்ற திருத்தங்களை உள்வாங்கி மாகாணசபைகள் தேர்தல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான புதிய தேர்தல் திருத்தசட்டத்தின்படி சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. 90 ஆயிரம் பேருக்கு ஒரு மாகாணசபை தொகுதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மலையகத்தில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமே மலையக தமிழ் மக்களுக்கு ஒருசில தொகுதிகளை உருவாக்க முடியும். மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மூன்று லட்சம் தமிழர்கள் ;பறந்த அடிப்படையில் வாழ்கின்றபோதும் அங்கு மலையக மக்களின் பிரதிநிதி;த்துவம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதே நிலைமையை ஊவா ää சப்ரகமுவ மாகாணங்களிலும் மலையக தமிழர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழுகின்ற பல லட்சக்கணக்கான முஸ்லீம் மக்களுக்கும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலும் தென்பகுதியில் சிறுபாண்மை மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகள் தேசிய கட்சிகளுடன் சேர்ந்தே தேர்தலை சந்தித்து வருகின்ற தன்மை காணப்படுகின்றது. இந்த தேர்தல் சட்டத்தின்படி பட்டியல் மூலம் ஐம்பது வீதமான உறுப்புரிமைக்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும் அது தேர்தலுக்கு பின்னரான விடயமாகவும்ää மக்கள் தீர்ப்பை தாண்டி தேசிய கட்சிகளின் தீர்மானத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும். பல சந்தர்ப்பங்களில் தொகுதிகளில் வெற்றிபெற்று ஆசணங்களை பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு பட்டியல் மூலமான உறுப்புரிமை கிடைக்காத சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பட்டியல் மூலமான உறுப்புரிமையை நம்பியிருந்த சிறுபாண்மை கட்சிகள் ஏமாற்றமடைய வேண்டிய நிலைமை ஏற்படும். சிறுபாண்மை மக்களுக்கு அதிகார பகிர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இந்த தேர்தல் திருத்த சட்டத்தின் மூலம் அதன் அடிப்படை நோக்கத்தையே தகர்த்துவிடும் தன்மையை கொண்டுள்ளது. வீதாசார தேர்தல் முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்திக் அதை விட குறைபாடுடைய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பாக மாகாணசபைகள் எல்லை நிர்ணயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவிடம் விணவியபோது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்கு அப்பால் சென்று சிபாரி;சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பதில் தருகிறார்கள். ஆயினும் இந்த புதிய முறை பல குறைபாடுகளை கொண்டுள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 50ற்கு 50 என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவாகும் போது எவ்வாறு மாகாண சபைகளில் ஆட்சியமைக்க முடியும்?
இது உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சட்டவிரேத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அரசாங்கம் கவணத்தில் கொள்ள வேண்டும். இதற்காக பழைய விதாசார தேர்தல் முறைக்கு போகவேண்டிய அவசியமில்லை. தற்போது அறிமுகப்படுத்த முனையும் கலப்பு தேர்தல் முறையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படத்துவதன் மூலம் சகல சமூகங்களுக்கும் மற்றும் சிரிய கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத சிறந்த தேர்தல் முறையை உருவாக்க முடியும்.
மாகாண இன ரீதியிலான சனத்தெகை வீதாசாரத்தை மாகாண சபைகளில் பிரதிபளிக்கும் விதத்தில் சிறிய தொகுதிகளை உருவாக்க வேண்டும். அத்துடன் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக கொண்டு 75 வீத உறுப்பினர்களும்ää கட்சிகள் பெரும் வாக்குகளை அடிப்படையாக கொண்டு 25 வீத உறுப்பினர்களும் தெரிவாகும் விதத்தில் இந்த தேர்தல் முறை திருத்தப்பட்டால் பெருமளவிலான குறைபாடுகள் நிவர்த்திக்க வாய்ப்புள்ளது. அத்துடன் ஸ்திரணமான மாகாண சபைகளை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கும். எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)