இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர்களில் ஒருவரும் மத்திய மாகாண அமைச்சருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தாயார் காலமானார்.
இந்த மறைவை தொடர்ந்து ஆறுமுகனின் பிறந்தநாள் நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு ஆறுமுகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பல கலைநிகழ்வுகளும் இசைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்யுமாறு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பணித்துள்ளதாக இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த தெரிவித்துள்ளார்.