மாகாண அமைச்சர் ரமேஷ் பொங்கல் வாழ்த்து!

0
104

தைத் திருநாளாம் தைப்பொங்கல் கோலாகளமாக கொண்டாடும் அனைத்து இந்து பெரு மக்களுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்;களின் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

உழவர்களின் அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் அன்று மகர சங்கராத்தியம் கொண்டாடப்படுகின்றது. சூரியனுடைய வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணம்தான் மகர சங்கராத்தியம் என்று சொல்லுகின்றார்கள். எமக்கு மழையையும் வெயிலையும் கொடுத்து உதவுகின்ற சூரியனுக்கு சூரியப் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துகின்ற ஒரு திருநாளாக இத் தைப் பொங்கல் அமைகின்றது. பொங்கல் பொங்கி வருகின்றபோது நாம் அனைவரும் சௌப்பாக்கியமாக வாழ்வதாக ஐதீகம் சொல்லுகின்றது.

பொங்கல் பலவிதமானது கோலிப் பண்டிகை, தைப்பொங்கள், மாட்டுப்பொங்கள், கானும் பொங்கல் என பல விதமான பொங்களை கொண்டாடுகின்றோம் எனவே தொழிலாளர்களின் வாழ்க்கையில் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒவ்வொருவரதும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வெற்றி பெறச்செய்து எம்மில் பல நல்ல வகையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் மேலும் மக்களிடையே புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு போன்ற எண்ணங்கள் உருவாகி எமது மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு எல்லா வல்ல இறைவனை பிறாத்திப்போம் என தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here