மாணவனை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்

0
27

9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி பயிலும் பாடசாலை சிறுவனின் பெற்றோரினால் நேற்று (13) முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபரான ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பாடசாலை மாணவனை அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சந்தேகநபரான ஆசிரியர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேகநபரான ஆசிரியரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முன்னிலைப்படுத்திய வேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 9 வயது பாடசாலை சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here