இந்த செய்தி முற்றிலும் தவறானது. குறிப்பிட்ட தாய் தனது மகனை தந்தை இல்லாத காரணத்ததால் தனக்கு நன்கு அறிந்த நலன்விரும்பி ஒருவர் பராமரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் இந்த நலன்விரும்பி சற்று தொலைவில் இருப்பதால் அந்த பிரதேச பாடசாலையில் கல்வி கற்க தான் எண்ணுவதாகவும் தெரிவித்து மேற்படி தாயார் விடுகைப்பத்திரத்தினை பெற்றுச் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாணவனின் விடுகைப்பத்திரத்தினை வழங்க மறுத்துள்ளதுடன் தாயாரின் எண்ணத்தை மாற்றி உமது பராமரிப்பிலேயே வளர்க்குமாறு பாடசாலை நிர்வாகம் ஆலோசனை வழங்கியது.
இருந்த போதும் குறித்த தாயார் விடாப்பிடியாக விடுகைப்பத்திரத்தினை பெற்றுச் சென்றுள்ளார். எப்போதும் யாரையும் பாடசாலை நிர்வாகம் சுயமாக மாணவர்களை விலக்கியது கிடையாது.
இவ்வாறு குழப்படி பண்ணும் மாணவர்களை விலக்கும் தீர்மானத்தை பாடசாலை கொண்டிருந்தாலும் எத்தனையோ பேரை விலக்கியிருக்கவேண்டும். பாடசாலை சிர்வாகம் ஒருபோதும் அப்படி செய்ததில்லை.
குறிப்பிட்ட பெற்றோரை அழைத்து அறிறுத்தல்களை மட்டுமே வழங்கியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் குறித்த தாயார் சுயவிருப்பின் பெயரிலேயே தனது பிள்ளையை விலககுவதாக கையொப்பம் இட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் யாரையும் மிரட்டி கடிதம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விலக்கக்ககூடிய கீழ்த்தரமான வேலையை செய்வதில்லை. எமது பாடசாலை இன்று வரை எத்தனையோ மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீபம் ஏற்றியுள்ளது. அதை இவ்வாறான குறுகிய ஒரு செய்தியை கொண்டு மட்டம் தட்டிவிடமுடியாது. செய்தியின் உண்மை தன்மை, இருபக்க நியாயம் என்பவற்றை கருத்திற் கொண்டு செய்திகளை வழங்கவும்.
குறிப்பு
——-
இந்த செய்தி மேற்படி பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் எமது செய்தியாளரிடம் கூறிய விடயங்கள்தான் எனவே தாயின் விருப்பின்படி அந்த சிறுவனை மீண்டும் இணைத்துக் கொள்ள தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் இணங்கி சமரசம் செய்து கொள்வதே சரியானது.