மாணவர்களின் திறமையை கல்வி ஊடாக மட்டும் கணிப்பிட முடியாது; சித்திர போட்டி நிகழ்வில் திலகர் எம்பி!

0
110

பாடசாலை பாடவிதானங்களுக்கு அப்பால், இணை பாடவிதான கல்வி, கற்பித்தலுக்கு மாறாக மாற்றுத்திட்ட விடயங்களை பாடசாலை மட்டத்தில் முழுமையாக செய்யமுடியாது. தனியான அமைப்பாக இருந்தும் மாணவர்களிடத்தில் சித்திர போட்டியை நடத்தியமை பாராட்டுக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் தெரிவித்தார்.

ஜீவ ஊற்று ஆங்கிலம் அகடமியின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை மாணவர்களிடத்தில் நடைபெற்ற சித்திர போட்டியில்வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே திலகர் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர், பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து அவர் உரையாற்றிய திலகர் எம்.பி,
மாணவர்களின் திறமையை கல்வியினூடாக மட்டும் கணிப்பிட முடியாது. மாறாக அவர்களிடத்திலுள்ள சித்திரம், இசை, நடனம் போன்ற கலைத் திறமைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
தற்போது நவீன தொழில்நுட்பத்தினால் மனித செயற்பாடுகள் மந்த போக்கில் செல்கின்றது. கடந்த காலங்களில் இவ்வாறான மேடை நிகழ்வுகளின் போது சிறந்த ஓவியனை தேடி, பெனர்கள் எழுதும் காலம் இருந்தது. தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றம் கண்டு விட்டதால் ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது.

இன்றைய காலாத்தில் சிறார்களிடத்தில் ஓவிய போட்டியை நடத்தியமை பாராட்டுக்குரியது. அதுபோலவே இந்த அமைப்பு கடந்த வருடம் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதிலும் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இது போல சமூகத்தின் இன்றைய தேவையை அறிந்து நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த அமைப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துகொண்டு, எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வளர சிறார்களுக்கும் வாழ்த்துகிறேன் என திலகர் எம்.பி மேலும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here