மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி!

0
25

கதிர்காமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் இன்றையதினம் (29) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பவத்திற்கு முகங்கொடுத்த மாணவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி கதிர்காமம் கோதமீகம பாடசாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, கோத்தமீகம பகுதியைச் சேர்ந்த மேற்படி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை 9 மணி முதல் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here