மாணவர்கள் செய்த சேதத்திற்கு பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு

0
175

மாணவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத்தருமாறு பெற்றோர்களுக்கு மனம்பிட்டி பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர், பாடசாலையின் சொத்துக்களுக்கு தாம் ஏற்படுத்திய சேதங்களுக்கு தமது பெற்றோர் நஷ்டஈடு வழங்குவதாக பாடசாலை அதிபர் முன்னிலையில் மாணவர் குழுவொன்று உறுதியளித்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மூலம் பாடசாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாணவர்கள் ஆறு பேர் மற்றும் அவர்களது பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்கப்பட்டதாகவும் ஏற்பட்ட சேதத்தை மீளப் பெற்றுத்தருவதாக பெற்றோர் உறுதியளித்ததாகவும் மனம்பிட்டிய பொலிஸ் நிலையப் பரிசோதகர் அசேல சரத் குமார தெரிவித்தார்.

மாணவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத்தருமாறு பெற்றோர்களுக்கு மனம்பிட்டி பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அதற்கு இணங்கியுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி சாதாரணத் தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து குறித்த பாடசாலையின் ஆறு மாணவர்களைக் கொண்ட குழுவினர் பாடசாலையின் உபகரணங்கள், மின் விசிறிகள், மலசலகூட கதவுகளை சேதப்படுத்தியமை தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here