மாணவர்கள் மத்தியில் கணித அறிவினை விருத்தி செய்யும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட கணித முகாம் ஒன்று ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா நுண்கலைக்கல்லூரியில் இன்று (11) ம் திகதி பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கணித முகாமில் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் கோணங்கள், அமைப்பு, புள்ளிவிபரவியல்,பொது அறிவு ,பின்னங்கள் கணித உபகரணங்கள் தயாரித்தல்.திண்மங்கள் உள்ளிட்ட விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் குறித்த இந்த முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமினை இன்று காலை 9.30.மணி தொடக்கம் மலை 3.30 வரை பார்வையிடலாம்.குறித்த உபகரணங்கள் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்து ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வித்தியாலயத்தில் நவீன உபகரணங்களுடன் புனரமைக்கப்பட்ட ஆங்கில கற்றல் பிரிவும் திறந்து வைக்கப்பட்டது. இந்த கணித முகாமினை ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்து உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அயல் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்