மாணவிகளை மோதித் தள்ளிய கார் : 15 வயது சிறுமி பரிதாப மரணம்

0
34

மொனராகலையில் (Monaragala) – இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கோர விபத்தானது கடந்த 27ஆம் திகதி பிபில (Bibile) – மொனராகல வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த துலாஷி கெஷாலா என்ற 15 வயது மாணவியே தற்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த இரண்டு மாணவர்களும் பயிற்சி வகுப்பிற்குச் சென்று மாலை ஐந்து மணியளவில் பிபில மொனராகலை வீதியில் உள்ள கடைக்கு முன்பாக வீதி ஓரத்தில் நின்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அந்தப் பகுதியால் பயணித்த கார் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு மாணவர்களின் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருந்தது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here