பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவில் தேயிலை மலையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
டின்சின் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கனகரத்தினம் உபேந்திரன் என்ற இளைஞரே நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி தோட்டத்தின் 2 ஏ தேயிலைமலையில், மூவரடங்கிய குழுவொன்று, சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்துள்ளது, அதன்போது, மண்மேடு சரிந்து குழிக்குள் விழுந்துள்ளது. அதிலிருந்து இருவர் தப்பிவிட்டனர். மற்றுமொருவர் மண்ணுக்குள் புதையுண்டு மரணித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.