மாணிக்கல் காணி ஏலவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்.

0
68

மாணிக்கல் காணி ஏல விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கினிகத்தேனை பிரதேச செயலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவலை மௌன்ஜீன் தோட்டத்தில் உள்ள காணியினை மாணிக்கல் அகழ்விற்காக ஏழு துண்டுகள் ஏல விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்டத்தில் உள்ள சுமார் 300 அதிகமான தொழிலாளர்கள் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜனவச தோட்டத்திற்கு சொந்தமான குறித்த காணியில் கடந்த காலங்களிலும் தேயிலை காணிகளை மாணிக்கல் அகிழ்விற்கு வழங்கியதன் மூலம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.அத்தோடு பாரிய சூழல் சீர்கேடுகள் ஏற்படுவதாக தெரிவித்து தொழிலாளர்கள் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த தோட்டத்தில் உள்ள ஏழு காணிகளை ஏல விற்பளையில் விற்பனை செய்தவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றர்.

தோட்ட நிர்வாகம் தொழிலளர்களுக்கு கொடுக்க வேண்டிய நலன்புரி விடயங்களையும் தொழிலாளர்களக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்காது இவ்வாறு காணிகளை ஏல விற்பனை செய்து வருவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here