க.பொ.த சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.