மாத்தறை, புனித தோமஸ் கல்லூரி மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை!

0
174

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த வீ.ஜீ.ஹரின் என்னும் பாடசாலை மாணவனே குறித்த தற்கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த மாணவன் நேற்று காலை பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அத்துடன் தனது தாய்க்கு அழைப்பொன்றை மேற்கொண்டு தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியினால் பதற்றமடைந்த தாய் மகனைத் தேடிச்சென்ற போது ஹரின் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தற்கொலை சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here