மாத்தளை (Matala) – மடவலவுல்பத்த பகுதியில் 17 வயது மாணவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த மாணவன் மடவளை – நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் (01) சென்றுள்ளார்.நண்பர் ஒருவரின் காதலியைச் சந்திப்பதற்காக உயிரிழந்த மாணவன் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் மீதும் மற்றும் உடன் சென்றவர்கள் மீதும் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.