மாத்தளை தோட்ட இளைஞன் வத்தளையில் அடித்து கொலை; காதல் விவகாரம் கொலையில் முடிந்தது!

0
122

வத்தளை, ஹேக்கித்த பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த இளைஞர் கண்டி, நித்தவெலையை பிறப்பிடமாகவும் ஓப்பல்கல்ல தோட்டம் மாத்தளையைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்பட்டது.

காதல் விவகாரமே இந்த இளைஞனனின் கொலைக்கு காரணம் எனவும் இவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தான் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது இருப்பிடத்துக்கு முச்சக்கர வண்டியில் திரும்பிய நிலையில் மேற்படி இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்டார் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், கொல்லப்பட்ட இளைஞன் மதுபோதையில் இருந்தார் என விசாரணைகளில் தெரியவருகிறது.

இவரது மரணத்துக்கு இவரது காதலியின் சகோதரர்களே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here