மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா!!

0
138

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ 01.03.2018 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் 01.03.2018 அன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

காலையில் இடம்பெற்ற அபிஷேகத்தினைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.

photo (1) photo (6) photo (8) photo (10)

காலை 10.00 மணியளவில் பிள்ளையார். முருகன், சிவன் அம்பாள், அருள்மிகு முத்துமாரியம்மன், சண்டேஸ்வரர் என ஐந்து சித்திரத் தேர்களும் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தைவிட்டு புறப்பட்டு மாத்தளை பிரதான வீதியூடாக பவனிவந்தது.

இந்த தேர் பவனியில் கலை, கலாச்சார மேலதாள இசை வாத்தியங்கள் இடம்பெற்றது.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here