மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு

0
23
dailythanthi

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் ‘மஞ்சணத்தி’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 7ம் தேதி தேனியில் தொடங்கியது. இளையராஜா – மாரி செல்வராஜ் இணையும் முதல் படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் பற்றி மாரி செல்வராஜ் பேசுகையில், “மஞ்சணத்தி திரைப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் வரை நிகழும் பெரிய திரைப்படமாக உருவாகிறது. 90 நாள்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். மஞ்சணத்தியை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here