மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் உபயோகிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!!

0
121

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பேச்சாளர்  தெரிவித்தார்.

அதேபோல் , இனவாத கருத்துகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோர் மற்றும் பரிமாற்றுவோர் தொடர்பிலும் அந்த ஆணையம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here