மாவட்ட ரீதியாக விற்கப்படவேண்டிய எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை பட்டியல் வெளியீடு

0
45

ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்கப்பட வேண்டிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் (12.5kg/5kg/2.3kg) வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்கப்பட வேண்டிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் (12.5kg/5kg/2.3kg) வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 3,470 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 137 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,393 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறித்த விலையுயர்வு கம்பஹா மாவட்டத்துக்கு மட்டும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.சர்வதேச சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையினை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்திற்கு அமைய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here