மின்கட்டணத்தை அதிகரித்தால் நடப்பதை பாருங்கள் – அமைச்சர் கஞ்சனவுக்கு கடும் எச்சரிக்கை

0
108

மின்கட்டணத்தை அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை பாருங்கள் என அமைச்சர் கஞ்சனாவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கடும்தொனியில் எச்சரித்துள்ளார்.

இதன்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை எனவும் மாறாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவு மின்சார அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட பிரேரணை.இது தவறான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த முன்மொழிவில் முறைகளின் எண்ணிக்கை, மின்சாரத் தேவை மற்றும் வழங்கல் போன்றவற்றில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here