மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்க முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

0
30

தமது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அயல் வீட்டில் மின்சாரம் எடுக்கச் சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும கும்புரேகொட ஹபரகட தோவலம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்து மின்கம்பியை இழுத்து மின்சாரம் எடுப்பதற்காக கம்பியை பொருத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

முதலில் அவரை நெலுவ மெதகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாளை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here