மின்சார துண்டிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0
26

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் 10இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீள வழங்குமாறும், மின்சாரக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீளிணைப்புக் கட்டணத்தை வசூலிக்காமல் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும், மறு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையிலும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here