முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மின்னல் நிகழ்ச்சியின் கதாநாயருமான ஸ்ரீ ரங்கா அவர்களை பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் நீங்கள் தயாரா என அழைப்பு விடுக்கிறார் தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன்.
மலையக மக்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மின்னல் நிகழ்ச்சியின் கதாநாயகனுமான ஸ்ரீ.ரங்கா அவர்களின் அரசியல் கபட நாடகத்தை இனிமேலும் ஏற்றுகொள்ள மலையக மக்கள் ஒன்றும் ஏமார்ந்தவர்கள் அல்ல கடந்த அரசாங்காத்தில் ஜந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா அவர்களே மலையக மகக்ளுடைய வாக்குகளை மாத்திரம் பெற்று கொண்ட நீங்கள் ஆக மலையக மக்களுக்கு என்ன செய்தீர்கள்” என கேள்வி எழுப்பகிறார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன்.
கடந்த சனிகிழமை பொகவந்தலாவ பகுதியில் உள்ள ஒரு சிலரை அழைத்து இதைதான் பேச வேண்டுமென மக்களிடம் சொல்லிகொடுத்து மக்களை பேசவைத்து அரசியல் காய் நகர்த்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்துகிறார் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன்.
கடந்த வாரம் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் மலையக அமைச்சர்களை விமர்சனம் செய்து தனது அரசியல் நாடகத்தை ஆரம்பித்த ரங்கா தான் ஒரு ஊடகவியலாளர் என்பதை மறந்துவிட்டு உரையாடுவது வருந்த தக்கது,
முடியுமானால் ஸ்ரீ ரங்கா அவர்களை என்னேடு விவாதத்திற்கு வருமாரு பகிரங்கமாக அழைப்ப விடுப்பதாக தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொகவந்தலாவ
எஸ்.சதீஸ்