மின் இணைப்பின் மீது பாரிய மரம் வீழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகியும் அகற்றப்படவில்லை பொது மக்கள் விசனம்.

0
25

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் கினிகத்தேனை நகருக்கு சமீபமாக பிரதான வீதியின் குறுக்கே பாரிய மூங்கில் மரம் ஒன்று வீழ்ந்து மின் இணைப்பு வயர் மற்றும் தொலைபேசி வயர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இரண்டு வாரங்களாக தொங்கி கொண்டிருக்கிறது இது அகற்றப்படாமை குறித்து பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் பயணிக்கின்றனர். எனினும் இந்த மரம் மேலும் முறிந்து வீழ்ந்து எவருக்காவுது ஆபத்து ஏற்படலாம். அல்லது சேதமேற்பட வாய்ப்பு காணப்படுவதாகவும் இது குறித்து உரியவர்கள் அக்கறை செலுத்தாது இருப்பது கவலையளிப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியிலேயே மின்சாரசபையின் பொறியியலாளர் அலுவலகம் இருப்பதாகவும்,இந்த வீதியினூடாகவே அவர்கள் நாளாந்தம் பயணஞ் செய்வதாகவும் இதனை கண்டும் காணாது போல் இருப்பது மிகவும் வேதனைகுரியது எனவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here