பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்றபோது அங்கு சட்டவிரோத மின் இணைப்பு கம்பியில் சிக்கிய மகனை காப்பாற்ற சென்ற தாயும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புஹம்பாந்தோட்டை – சூரியவெவ, வீரியகம பகுதியில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது ஐந்து வயது குழந்தையும் புதன்கிழமை (05) மாலை அண்டை வீட்டில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில், 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனுமே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த குழந்தை, தான் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு விளையாடுவதற்காக சிறுவர்கள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதனையடுத்து தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.