மின் கட்டணம் ஆன்லைனில்

0
108

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் கட்டணங்கள் மற்றும் கட்டணச் செலுத்துதல்கள் இணையத்தளத்தில் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இது அச்சிடப்பட்ட காகிதத்தில் வழங்கப்படுவதாகவும், செலவைக் குறைக்கும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், தற்போது தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படும் சில சேவைகள் மின்சார சபை ஊழியர்களாலும், உள்ளூராட்சி அதிகாரிகளால் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்கும் குறைப்பதற்கும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here