மின் கட்டண உயர்வு மலையக மக்களுக்கு மற்றொரு தலையிடியாக அமைந்துள்ளது. சஞ்சய் லெட்சுமனார் கண்டனம்.

0
67

நாட்டில் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையாக அமைந்துள்ளது.பொருட்களின் விலையை முயல் வேகத்தில் அதிகரித்த அரசாங்கம் குறைக்கும் போது ஆமை வேகத்தில் குறைக்கின்றனர்.மேலும் மின்கட்டணமும் அதிகரித்துள்ளமை மலையக மக்களுக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மைதான் அதேபோல பணவீக்கமும் அதிகரித்துள்ளது ஆனால் மறுபக்கம் தேயிலையின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிக்கப்பட்டாலும் மலையக மக்களின் வறுமானமும் அவர்களின் முன்னேற்றமும் அப்படியேதான் இருக்கின்றது.

அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்யவே மிக கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் மின்கட்டணத்தை உயர்த்தியமை பாரிய தலையிடியை மலையக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.உணவு பிரச்சனை, பிள்ளைகளின் கல்வி பிரச்சனை பொருளாதார பிரச்சனை என காணப்படும் மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது மின்கட்டண உயர்வும் மற்றொரு பிரச்சனையாக அவதாரம் எடுத்துள்ளது.

எனவே அரசாங்கம் தீர ஆராய்ந்து மின்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மீள்ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஞ்சய் லெட்சுமனார் தெரித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here