மின் கட்டண குறைப்பு தொடர்பில் மேலும் கால அவகாசம்

0
21

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் மேலும் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக மேலும் இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here