நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
டிரைலர் நெடுகிலும் துப்பாக்கி சப்தங்கள் ஆக்கிரமித்துள்ளன. தனுஷும் இரண்டு விதமான தோற்றங்களில் படத்தில் நடித்துள்ளார்.
“நீ யாரு.. உனக்கு என்ன வேணும்ங்குறதை பொறுத்து நான் யாருங்குறது மாறும்” என்பதை போன்ற அட்டகாசமான வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுடன் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அத்துடன் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் 12ம் திகதி ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்துடன் அயலான், மிஷின், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.