நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, வனஜீவிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகளினால், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வனஜீவிகள் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவையும்’ காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.