மீண்டும் உயர்வை நோக்கி நகரும் தங்கத்தின் விலை! இரண்டு இலட்சத்தை அண்மிக்கலாம்!

0
31

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது.அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இலங்கையில் தங்க நிலவரத்தின் படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அத்தோடு, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி இரண்டு இலட்சம் ரூபா வரை சென்றிருந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்து வருகின்றது.

தற்போது 24 கரட் தங்கப் பவுண் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்த விலையில் காணப்படுகின்றது.
Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here