மீண்டும் ஊவா மாகாண கல்வி அமைச்சராகிறார் சாமர சம்பத் – பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு!!

0
136

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்துக்கு மீண்டும் மாகாண கல்வி அமைச்சு பதவி வழங்கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஆசிரியை ஒருவரை மண்டியிட செய்த சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரின் கல்வி அமைச்சு பதவி அவரிடமிருந்து பரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவருக்கு அந்த பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிலையில் அவருக்கு அந்த பதவியை வழங்கியமை ஆசிரியையின் பாதுகாப்புக்கு பிரச்சினையானது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here