மீண்டும் எரிபொருள் வரிசை உருவாக பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம் …

0
106

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில தீர்மானங்களினால் மக்கள் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன், எரிபொருள் இருப்பு இன்மையின் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக காலை 9.30 இற்கு முன்னதாக பணம் செலுத்தாத நிலையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்பதிவுகளை இரத்து செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here