பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலுள்ள சிலர் எங்களிடம் கூறினர்.
அதன்படி தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த அரசாங்கமே வீட்டுக்கு செல்ல வேண்டும்.
பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.