மீண்டும் புடவை அணிந்ததால் சர்ச்சையில் சிக்கிய பெண்- ஹட்டனில் சம்பவம்!!

0
148

ஹட்டன் நகரில் உள்ள அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிகமாக பணி செய்யும் பெண் ஒருவர் அணிந்திருந்த புடவையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

புத்தர் உருவத்துடனான புடவை அணிந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் அந்த புடவையை மீட்டுள்ளனர்.

பச்சை நிறத்திலான புடவையின் போடர் பகுதியில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த புடவையில் வெட்டிய பகுதியில் மேல் சட்டை தைத்து குறித்த பெண் அணிந்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ள இந்த பெண் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் தற்காலிகமாக அரசாங்க நிதி நிறுவனத்தில் சேவை செய்கின்றார். அவரால் ஹட்டனில் ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை 1500 ரூபாவுக்கு புடவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஆடை கடையை பொலிஸார் பரிசோதித்த போது புத்தர் உருவம் அச்சிடப்பட்ட புடவைகள் இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண் மற்றும் கடை உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட அனைத்து புடவைகளையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here