மீன் ஆசையால் 4 உறுப்புகளை இழந்த அமெரிக்க பெண்

0
228

அமெரிக்க பெண் ஒருவர் மோசமான பக்டீரியா தொற்றுக்கு ஆளானதன் விளைவாக, அவரின் நான்கு உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் அதிக ஆபத்தான பக்டீரியாவில் மாசடைந்த திலாப்பியா மீன்களை, முறையாக வேகவைக்காமல் உட்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண்மணியே, இந்த கொடிய பக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த வியாழன் (செப். 14) அன்று உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here