மீன் பிடிக்கச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; இழுத்து சென்ற முதலை!

0
33

மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று அம்பாறையில் நேற்று (14) மாலை பதிவாகியுள்ளது.அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்து சென்றுள்ளது.

சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே முதலை இவ்வாறு இழுத்துச் சென்றுள்ளதுடன் இதுவரை அப்பெண் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது.

காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் பிரதேச சபைகள், சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here