அஜித் நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் துணிவு. நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சி முடிந்த பின் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
அஜித் – எச். வினோத் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் மாபெரும் அளவில் வரவேற்பை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
வசூல்
இந்நிலையில், வட அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ப்ரீமியர் 207 இடங்களில் செய்யப்பட்டுள்ளது. இதில் மட்டுமே $229,051 வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது துணிவு.
அதுமட்டுமின்றி இப்படம் தான் வட அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்து அஜித் திரைப்படம் என்ற புதிய மையில் கல்லையும் எட்டியுள்ளது.விரைவில் $250K வரை துணிவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.