முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்த தீர்மானம்! : ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்

0
91

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ்வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here