முச்சக்கரவண்டிகளைத் திருடியவர் உட்பட நால்வர் கைது

0
77

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கரவண்டிகளைத் திருடிய ஒருவர் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த நால்வரும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 9 முச்சக்கரவண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here