முச்சக்கரவண்டி சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு!!

0
138

பயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்தப்பட்டு அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் முறைமை நாளை(20) முதல் நடைமுறைக்கு வரும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டியின் சேவையினை உயர்த்தவே குறித்த சட்டத்தினை நாம் கொண்டு வந்தோம். பற்றுச்சீட்டு வழங்கும் மீட்டரினை பொருத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்தும் அவர்கள் கோரியதற்கு இணங்க 06 மாத கால அவகாசம் கொடுத்தோம்.

குறித்த அவகாசம் ஏப்ரல் 01ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆதலால் பயணிகளுக்கான பற்றுச்சீட்டு வழங்கும் முறைமை ஏப்ரல் 20ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. அவ்வாறு பற்றுச்சீட்டு வழங்கத் தவறும் சாரதிகளுக்கு எதிராக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் 0112-696890 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here