முடிவுக்கு வந்தது தாதியர் பற்றாக்குறை; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 40 தாதியர்¸ 25 வைத்தியர்கள் நியமனம்- அமைச்சர் ராதா நடவடிக்கை!

0
113

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டு சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக இயங்கி வருகின்ற போதும் தற்போது அதிதீவிர கிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகள் தாதியர் போதாமை காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. 104 தாதியர்கள் தேவையான நிலையில் 60 தாதியர்களே காணப்படுகின்றனர். 44 தாதியர்களின் பற்றாக்குறை காணப்பட்டுகின்றது.

இந் நிலையில் நிலமையினை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.விஜேதுங்க கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான வே .இராதாகிருஸ்ணன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களை தொடர்பு கொண்டு இந்த வைத்தியசாலை உட்பட நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சில் கலந்துறையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சரின் செயலாளர் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள்¸ நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளின் மருத்துவ அதிகாரிகள்; மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம்¸ கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

இந்த கலந்துறையாடலின் பயனாக தாதியர் இன்றி ஸ்தம்பிதம் அடைந்திருந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 40 தாதியர்கள் உடனயாக நியமனத்தை பெற்றுக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் அத்துடன் 25 வைத்தியர்களுக்கான நியமனமும் வழங்ககுமாறும் பணித்துள்ளார் மேலும் இந்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய 150 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கபட்டுள்ளதுடன்; அதன் முதல் கட்டமாக 35 மில்லியன் ரூபா தற்போது வழங்கபட்டுள்ளது.

அத்துடன் கெப்ரக வானம் ஒன்று வேன்ரக வாகனம் ஒன்று கதிர் வீச்சு பிரிவிற்கான ஊழியர்கள்¸ வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்குமான தங்குமிட வசதிகள்¸ மருந்தகம்¸ வெளி நோயாளர் பிரிவு அபிவிருத்தி போன்ற பல வேலைத்திட்டங்கள்¸ உட்பட பற்றாகுறையாக இருக்கும் ஏனைய வைத்திய சேவைசார் அதிகாரிகள் அனைவரும் நியமிக்கபடவுள்ளனர்.

சுமார் நான்கு இலட்சம் பேர் சனத்தொகையை கொண்ட அட்டன் பிரதேச மக்கள் பயன் அடைய கூடியதாக அமைக்கபட்ட இந்த வைத்தியசாலையில்; 80 வீதமானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களாவர். இந்த வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரிவுகளும் முறையாக இயங்க வேண்டுமானால் 104 தாதியர்கள் வேண்டும். இவர்களில் சத்திரகிசிச்சை பிரிவிற்கு ஆண் பெண் தாதியர் 12 பேரும்¸ அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு 08 பேரும். குழந்தை பேறு பிரிவிற்கு 06 பேரும்¸ அவசர சிகிச்சை பிரிவிற்கு 04 பேரும் கண் சிகிச்சை பிரிவிற்கு 08 பேரும் ஏனைய சிகிச்சை பிரிவுகளுக்கு 06 அடங்களாக 44 தாதியர்கள் தேவை உள்ளது.

இந்த தேவை குறைபாடு காரணமாக மேற்படி சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நாளாந்தம் வைத்திய சேவைக்காக செல்லும் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந் நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் நடவடிக்கையால் இந்த வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி அடைவது பாராட்டதக்க ஒன்றாகும்

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here