முடி உதிர்வை தடுக்கும் சில வழிமுறைகள்!!

0
97

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும், நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.

பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சனைகள் ஏராளம். இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும், முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

கறிவேப்பில்லை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here