வெள்ளை முட்டை ஒன்றுக்கு 42 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 44 ரூபாவும் வழங்க நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முட்டை உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குஹேரட சொய்சா, அந்த விலைக்கு உடன்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.