முட்டையை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்தால், தாம் தொழிலில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
2022 டிசம்பரில், முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வாக, கொழும்பு, கம்பஹாவில் முட்டைகளை 55 ரூபாய்க்கு விற்கும் விசேட திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
அரசாங்கமும் முட்டை உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் முட்டைகளை இறக்குமதி உள்ளுர் தொழில்துறைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே முட்டையை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது